ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home சோதிடம்

Horoscope

இந்த வார ராசிபலன் (12.02.2010 முதல் 18.02.2010 வரை)

மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய)


பொது: இதமான அனுபவங்களை எதிர்கொள்வீர்கள். சிறு சிறு தடுமாற்றங்களை சந்தித்தாலும் விடா முயற்சியால் அனைத்தும் சாதமாகவே மாறும்.

பெண்களுக்கு: நல்ல மனிதர்களின் சகவாசம் ஏற்பட வாய்ப்புண்டு. திடீர் செலவுகள் ஏற்படலாம். வெள்ளிக்கிழமை சிறப்பு.

வேலை பார்ப்போருக்கு: கூட்டு முயற்சிகளால் பலன் உண்டு. சக பணியாளர்களால் பணிச் சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


*************************************************************************************************
ரிஷபம் ( கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசிரீஷம் 2-ம் பாதம் முடிய)


பொது: அலைச்சல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கூடவே அந்தஸ்தும் உயர வாய்ப்புள்ளது. புதிய பொருள் சேர்க்கைக்கான யோகம் உள்ளது.

பெண்களுக்கு: குடும்ப உறுப்பினர்கள் உடனான கருத்து வேறுபாடுகளை சரி செய்வதற்கு ஏற்ற சாதகமான சூழல்கள் அமையும். பணப் புழக்கம் சரளமாக இருக்கும்.

வேலை பார்ப்போருக்கு: உங்கள் திறமை தொடர்பாக மேலதிகாரிகளின் மறைமுக பரிசோதனைகளுக்கு ஆளாவீர்கள். வேலையில் சலிப்பு காட்டும் மனநிலை தோன்றக்கூடும், கவனம் தேவை


*************************************************************************************************

மிதுனம் (மிருகசிரீஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொது: குடும்ப விவகாரங்களுக்கான முயற்சிகள் அனுகூலமான பலன்களை தரும். பண வரவு எதிர்பார்த்தபடி இருக்கும். மோட்டார் இயந்திரங்கள் தொடர்பான வேலையின் போது கவனம் தேவை.

பெண்களுக்கு: புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். குடும்பம் அல்லது நட்பு வட்டாரத்தில் பேச்சின் மூலமாக சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

வேலை பார்ப்போருக்கு: வேலையில் மந்தப்போக்கு இருப்பது போல காணப்படும். உடலுழைப்பை குறைத்து மனதுக்கு அதிக வேலை கொடுப்பீர்கள் திங்கள் கிழமை சிறப்பான நாள்

*************************************************************************************************
கடகம் ( புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)


பொது: சாமர்த்தியத்தனம் வெளிப்படும் வாரம். பேச்சில் வசீகரம் கூடும். குடும்ப விவகாரங்களில் நிதானத்தை கடைப்படிக்க வேண்டியது அவசியம்.

பெண்களுக்கு: ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். சுப காரியங்களால் விரயம் ஏற்படக்கூடும். அவசியமற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

வேலை பார்ப்போருக்கு: மேலதிகாரிகள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதை புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். இதனால் பணிச்சூழல் சுமூகமானதாக இருக்கும்.


*************************************************************************************************
சிம்மம் (மகம் ,பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)


பொது: குடும்பத்திலும், வெளி வட்டாரத்திலும் செல்வாக்கை உயர்த்துவதற்கான யோகம் காணப்படுகிறது. செயல்பாடுகளில் பொது நலன் மேலோங்கும். புதன் கிழமை சிறப்பு.

பெண்களுக்கு: நல்ல செய்தி கள் தேடி வரும். பேச்சு மூலம் காரியத்தை சாதித்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். முக்கியஸ்தர்களின் அறிமுகம் கிடைக்கும்.

வேலை பார்ப்போருக்கு: திட்டமிட்டபடி வேலைகள் நடக்கும். வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.


*************************************************************************************************
கன்னி ( உத்திரம் 2-ம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொது: சுகங்களும், சோகங்களும் கலந்த வாரம். கடுமையான முயற்சிகளுக்கு அவசியம் ஏற்படும். தியானமும், தெய்வ நம்பிக்கையும் கைகொடுக்கும்.

பெண்களுக்கு: பரபரப்பான மனநிலையில் இருப்பீர்கள். உடன் இருப்பவர்களுடன் போட்டி மனப்பான்மை மேலோங்கும்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகளின் பாராட்டுக்காக கடினமாக உழைப்பீர்கள். கலை மற்றும் நிதித் துறை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.


*************************************************************************************************
துலாம் ( சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)


பொது: சுபகாரியங்கள் தடையின்றி முடிவடையும். திடீர் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்ப உறுப்பினர்களுடன் அன்னியோன்னியம் கூடும்.

பெண்களுக்கு: நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த காரியம் நிறைவேறும். பொருள் சேர்க்கைக்கான யோகம் உள்ளது. உடல் நல தொந்தரவு ஏற்படலாம்.

வேலை பார்ப்போருக்கு: பணிச்சூழலில் சஞ்சலம் ஏற்படக்கூடும். இடமாற்ற எண்ணங்களை தள்ளிப்போடுவது நல்லது.

*************************************************************************************************
விருச்சிகம் ( விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம். கேட்டை முடிய)


பொது: சாதாரண விஷயங்களிலும் அதிக முயற்சியை செலுத்த வேண்டியிருக்கும். சிந்தனைத் தெளிவும், கடின உழைப்பும் கைகொடுப்பதை ஆத்மார்த்தமாக உணருவீர்கள்.

பெண்களுக்கு: உறவினர்களால் அலைச்சல் ஏற்படலாம். பண விவகாரங்களில் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

வேலை பார்ப்போருக்கு: புதிய பொறுப்புகள் அல்லது ஒப்பந்தம் தேடி வரும். வேலைப்பளு அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு.


*************************************************************************************************
தனுசு (மூலம், பூராடம். உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொது: விருப்பங்கள் எளிதில் நிறைவேறும் யோகம் உள்ளது. செயல்பாடுகளில் சாதுர்யம் பிரகாசிக்கும். வடக்கு திசையில் இருந்து வரும் தகவலால் ஆதாயம் உண்டு.

பெண்களுக்கு: உற்சாகமான மனநிலையுடன் இருப்பீர்கள். கவனச் சிதறலை தவிர்த்து இலக்கை நோக்கிய எண்ணங்களை கூர்மைப்படுத்தினால் அனுகூலம் ஏராளம்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகளின் ஆதரவு  கிடைக்கும். பணப்புழக்கம் நிறைவாக இருக்கும். சனிக்கிழமை விருப்பமான சம்பவம் நடைபெறும்.


*************************************************************************************************
மகரம் ( உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பொது: உங்களின் நம்பகத்தன்மையை மற்றவர்கள் மத்தியில் நிரூபிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படும். தன்னம்பிக்கையும், ஆரோக்கியமும் பிரகாசிக்கும்.

பெண்களுக்கு: முக்கியஸ்தர்களின் சந்திப்பு மூலமாக நிலுவையில் இருந்த காரியம் நிறைவேறும். சகோதர வழியில், உங்களால் ஆதாயம் பெறுகிற சூழ்நிலை அமையும்.

வேலை பார்ப்போருக்கு: ஒதுங்கியிருந்த விவகாரங்களில் ஈடுபட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடும். பணிச் சூழலில் போட்டி உருவாகும்.

 *************************************************************************************************
கும்பம் ( அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய

பொது: அன்பே பிரதானம் என்கிற எண்ணம் மேலோங்கும். வீண் அலைச்சலுக்கும், கடும் உழைப்புக்கும் உள்ள வித்தியாசத்தை உணருவீர்கள். வியாழன் கிழமை சிறப்பு.

பெண்களுக்கு: தொழில் சார்ந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கூட்டு முயற்சிகளால் அலைச்சல் ஏற்படக்கூடும்.

வேலை பார்ப்போருக்கு: சின்னச் சின்ன தடுமாற்றங்களால் பின்னடைவு போன்ற தோற்றம் காணப்படும். சஞ்சலத்தை தவிர்த்து சிந்தனையை தெளிவாக்குவீர்கள்.


*************************************************************************************************
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)


பொது: முந்தைய முயற்சிகளின் பலன்களை அறுவடை செய்யும் யோகம் உள்ளது. குடும்பத்தில் குதூகலம் காணப்படும். மேற்கு திசையில் இருந்து வரும் தகவலால் ஆதாயம் உண்டு.

பெண்களுக்கு: வார்த்தை பிரயோகத்தின் மூலம் திருப்புமுனை ஏற்படும் சூழ்நிலைகள் உண்டாகும். செவ்வாய் கிழமை அனுகூலமான நாள்.

வேலை பார்ப்போருக்கு: புதிய இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டியிருக்கும். சக பணியாளர்கள் உங்களால் உற்சாகம் பெறும் சூழ்நிலைகள் அமையும்.


***************************************************************************************