ஜூலை 30, 2010 யாழ்ப்பாணம் மின் பொறியியலாளர் பிரதேசத்திற்குட்பட்ட சில பகுதிகளில் திருத்த வேலைகள் காரணமாக நாளை 30 ஆம் திகதி மின்சாரம் தடைப்படுமென மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.
பருத்தித்துறை - யாழ்ப்பாணம் பிரதான வீதியை அகலமாக்கும் நடவடிக்கை காரணமாக உயரழுத்த மின் கம்பங்களை இடமாற்றம் செய்யவேண்டியுள்ளதால் புன்னாலைக்கட்டுவன், அச்செழு, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, ஆகிய பிரதேசங்களிலும் வடமராட்சிப் பிரதேசம் முழுவதிலும் இந்த மின்வெட்டு அமுலில் இருக்குமெனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேபோன்று நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய் மற்றும் காரைநகர், ஊர்காவற்றுறை, வேலணை,அல்லைப்பிட்டி, சரவணை ஆகிய தீவகப் பகுதிகளிலும் மின்சாரம் தடைப்படவுள்ளது.
இப்பிரதேசங்களில் இரு தினங்களிலும் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் யாழ் பிரதேசப் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.













