ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home News item 2 கொழும்பில் 2010 இல் டெங்குக்கு 16 பேர் மரணம்

கொழும்பில் 2010 இல் டெங்குக்கு 16 பேர் மரணம்

E-mail Print PDF

ஜூலை 30,  2010  இந்த வருடத்தில் மாத்திரம் கொழும்பு மாநகரத்தில் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மாதத்திற்குள் கொழும்பில் நான்கு டெங்கு நோயாளர்கள்  உயிரிழந்துள்ளதாகக் கொழும்பு மாநகரசபையின் சுகாதார அதிகாரி பிரதீப் காரியவாசம் குறிப்பிட்டார்.

இவ்வாண்டில் 1419 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுள்  417 நோயாளர்கள் இம்மாதத்தில் இனங்காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி கூறினார்.

கொழும்பு மாநகரில் கொம்பனி வீதிப் பிரதேசமே அதிகளவில் அசுத்தமாகக் காணப்படுகிறது.

சட்டவிரோதக் கட்டடடங்களை அண்மித்த பகுதிகளில் குப்பைகளைக் கொட்டுவதனால் டெங்கு நோய் பரவக்கூடிய அபாயமுள்ளதாகச் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

Last Updated ( Friday, 30 July 2010 09:20 )