ஜூலை 30, 2010 இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேரமுடிவில், தனது முதல் இன்னிங்சில் 669 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கட்களை இழந்திருந்தது.
ஒரு விக்கட் கைவசமிருக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில், 27 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
துடுப்பாட்டத்தில் சச்சின் டென்டுல்கர் 203 ஓட்டங்களை குவித்தார்.
இலங்கை தனது முதல் இன்னிங்சி்ல் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 642 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.













