ஜூலை 30, 2010 கொழும்பு ஹுனுப்பிட்டிய லேக் வீதியில் அமைந்துள்ள வெற்றி எஃப் எம், வெற்றி ரீ வீ, சியத்த எஃப் எம், சியத்த ரீ வீ , றியல் ரேடியோ நிறுவனங்கள் அமைந்துள்ள வொயிஸ் ஒஃப் ஏஷியா நிறுவனம் தீயினால் சேதமடைந்துள்ளது.
இன்று அதிகாலை 1.20 அளவில் தீச் சம்பவம் இடம்பெற்றதாகப் பொலிசார் கூறினர்.
தொலைக்காட்சிச் சேவைகள் நடத்திச் செல்லப்படும் கட்டடமும் வானொலிச் சேவைகளை நடத்திச் செல்லும் கட்டடத்தின் இரண்டு மாடிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகச் சியத்த வானொலி முகாமையாளர் உதித்தமால் ஹேமச்சந்திர கூறினார்.
இந்த நிறுவனங்களின் செய்திப் பிரிவு தீயினால் முற்றாகச் சேதமடைந்துள்ளது.
காயமடைந்த இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிசாரும் தீயணைப்புப் படையினரும் தீ பரவுவதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.













