ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home News item 2 அடுத்த சுதந்திர தின விழா மொனராகலையில்

அடுத்த சுதந்திர தின விழா மொனராகலையில்

E-mail Print PDF

ஜூலை 29, 2010  அடுத்த வருடம் சுதந்திர தின பிரதான நிகழ்வை மொனராகலை, தேசத்தின் மகுடம் கண்காட்சி மைதானத்தில் நடத்துவதற்கு எண்ணியுள்ளதாகப் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய தெரிவிக்கிறார்.

நேற்று  புத்தல பிரதேச செயலாளர் அலுவலகத்தில் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி தொடர்பாகப் பிரதேசத்தின் அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகளைத் தெளிவுபடுத்த  இடம்பெற்ற  கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் தலைமையில் சுதந்திரதினப் பிரதான வைபவம் புத்தல பல்கலைக்கழகம் மற்றும் தொழிநுட்பக் கல்லூரி வளாகத்தில் இடம்பெறும்.

இந்த நிகழ்வுகளினூடாக மொனராகலையில் அடிப்படை வசதிகள் மற்றும் மனித வள மேம்பாட்டிற்காக 25 ஆயிரம் பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையைச் செலவிட எதிர்பார்க்கப்படுகிறது.