ஜூலை 29, 2010 யாழ் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பொது மக்களுக்கான நடமாடும் சேவையொன்று எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்படவுள்ளது.
சுன்னாகம், மருதனார் மடம் இராமநாதன் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் வரை இந்த நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.
தேசிய அடையாள அட்டை, கடவுச் சீட்டு என்பவை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சிறு குற்றங்கள், மத்தியஸ்த சபையினால் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சனைகள் என்பவற்றுக்கும் இதன்போது தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.
இணுவில், சுன்னாகம், உடுவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த எட்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கியதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நடமாடும் சேவையில் மக்கள் கலந்துகொண்டு தமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.













