ஜூலை 29, 2010 கொழும்பு முகத்துவாரம் கதிரான பாலத்திற்குக் கீழ் அகழ்வு மேற்கொள்ளப்படும் இடத்திலிருந்து அடையாளம் காணப்படாத ஆணின் சடலமொன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
35 முதல் 40 வயதுக்கிடைப்பட்ட ஒருவரின் சடலமாக இது இருக்கலாமெனப் பொலிசார் தெரிவித்தனர்.
முகத்துவாரம் பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.













