ஜூலை 29, 2010 களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் பேஸ்லைன் வீதிக்குள் பிரவேசிக்கும் பண்டாரநாயக்க சுற்றுவட்டத்திலிருந்து பொரளை ஆயுர்வேத சுற்றுவட்டம் வரையிலான வீதியில் ஒருவகை வழுக்கும் எண்ணெய் கொட்டியுள்ளதாகப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதனால் வீதியில் வழுக்கும் தன்மை காணப்படுவதால் இந்த வீதியை வாகனப் போக்குவரத்திற்காகப் பாவிக்கும் சாரதிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான பிரிஷாந்த ஜெயக்கொடி கேட்டுள்ளார்.
இது தொடர்பாகக் கொழும்பு போக்குவரத்துப் பிரிவுப் பொலிசார் அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.
பொலிஸ் திணைக்களம், ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து மண்ணைப் போட்டு எண்ணெய்யை வீதியிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.













