ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home

இரண்டாவது டெஸ்டில் இன்று இந்தியாவின் ஆதிக்கம்

E-mail Print PDF

ஜூலை 28, 2010  இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முன்றாம் நாள் ஆட்டத்தில் இந்தியா  முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது.

கொழும்பு எஸ் எஸ் சி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடும் இந்தியா இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 382 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் 48 ஆவது சதத்தை பூர்த்தி செய்ததுடன் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தச் சிறந்த பங்களிப்பை வழங்கினார்.

சச்சின் டெண்டுல்கர் 108 ஓட்டங்களையும், சுரேஸ் ரெய்னா 66 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தனர்.

அஜந்த மெண்டிஸ் மற்றும் சுராஜ் ரந்தீவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை விழ்த்தியுள்ளனர்.

இலங்கை தனது முதல் இன்னிங்சி்ல் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 642 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

 

 

Last Updated ( Thursday, 29 July 2010 05:31 )