ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home

சிறுவர் இல்லச் சிறுவர்கள் இருவர் மீது துஷ்பிரயோகம்

E-mail Print PDF

ஜூலை  28, 2010  நீதிமன்ற உத்தரவின்பேரில் அநுராதபுரம் நகரிலுள்ள சிறுவர் இல்லமொன்றில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சிறுவர்களைத் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படும் நிலையத்தின் நிர்வாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று அநுராதபுரம் பிரதம நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான தர்ஷிகா விமலசிறி முன்னிலையில்  ஆஜர்செய்யப்பட்ட சந்தேக நபரை அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேக நபர் சில காலத்துக்கு முன்பிருந்தே இந்தக் குற்றத்தை இழைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளதாகப் பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதற்கு முந்தைய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மீரிகம கித்துல்வல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.