ஜூலை 28, 2010 இன்று முதல் ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்காக மாகாணப் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் ஆகியோரைச் சந்திக்கக் கூடியதாக இருக்குமெனப் பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவின்பேரில் இன்று முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜெயக்கொடி குறிப்பிட்டார்.
குறித்த பொலிஸ் மா அதிபர்களை அவர்களது அலுவலகங்களில் சந்தித்துப் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கமுடியுமெனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.













