ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home News item 2 சிறிகொத்த முன் தீக்குளித்தவரின் இறுதிக் கிரியை இன்று

சிறிகொத்த முன் தீக்குளித்தவரின் இறுதிக் கிரியை இன்று

E-mail Print PDF

ஜூலை  28, 2010 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயம் சிறிகொத்த முன் தீக்குளித்து உயிரிழந்த ரியன்ஸி அல்கமவின் இறுதிக் கிரியைகள் இன்று  மாலை நடைபெறவுள்ளது.

அவரது பூதவுடல் நேற்றிரவு வெலிகம, இப்பாகமுவ - ரணமடுகம பிரதேசத்தில் அமைந்துள்ள அவரின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தீக்குளித்து இறந்த 60 வயதான ரியன்ஸி அல்கம சுமார் 20 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளராக இருந்து வந்ததாக அவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்குப்  பெருந் தொகையானோர் அவரின் இல்லத்திற்கு வருகை தந்தவண்ணமுள்ளதாக எமது செய்தியாளர் கூறுகிறார்.

Last Updated ( Thursday, 29 July 2010 13:00 )