ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home

முன்னாள் போராளிகள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்

E-mail Print PDF

ஜூலை  28, 2010 எல் ரீ ரீ ஈ இயக்கத்துடன் இணைந்ததன் காரணமாகத் தமது கல்வியை இடை நடுவே கைவிட்ட 20 வயதைக் கடந்த இளைஞர், யுவதிகளுக்கு உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான 362 இளைஞர் யுவதிகள் தனியார் விண்ணப்பதாரிகளாக இம்முறை பரீட்சையில் தோற்றவுள்ளதாகப் புணர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க தெரிவித்தார்.

வவுனியா பூந்தோட்டம் நிவாரணக் கிராமத்திலிருந்து பரீட்சையில் தோற்றுவதற்கு  இவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாகப் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சொன்னார்