ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home News item 2 சட்டவிரோத இலங்கைக் குடியேறிகள் அமெரிக்காவில் கைது

சட்டவிரோத இலங்கைக் குடியேறிகள் அமெரிக்காவில் கைது

E-mail Print PDF

ஜூலை  28, 2010  அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்த 6 இலங்கையர்கள் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க முற்பட்டதாகத் தகவல்கள் கிடைத்ததையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட 6 இலங்கையர்களும் பாம் பீச் பகுதியில் சுற்றித் திரிந்தபோது பொலிசார் சந்தேகத்தின்பேரில் அவர்களை விசாரித்தபோது அவர்களிடம் அமெரிக்காவில் வசிப்பதற்கான ஆவணங்கள் எதுவும் காணப்படவில்லை.

இதனையடுத்து அவர்களை பாம் பீச்  பொலிசார் கைதுசெய்து  உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வத்துள்ளனர்.

தற்போது அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக இலங்கைத் தூதுவர் கூறினார்.

விசாரணைகளின் பின்னரே அவர்களை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றுவதா அல்லது தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்வதா என்பதுபற்றி முடிவுசெய்யப்படுமென அவர் சொன்னார்.

Last Updated ( Wednesday, 28 July 2010 07:07 )