ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home News item 2 மின்சாரப் பாவனை தொடர்பாக ஆய்வு

மின்சாரப் பாவனை தொடர்பாக ஆய்வு

E-mail Print PDF

ஜூலை  28, 2010 மின்சாரப் பாவனை அதிகமாக உள்ள நேரத்தில் மின்சாரத்தை அதிகமாகப் பாவிக்கும் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பாக இலங்கை மின்சார சபை ஆய்வொன்றை ஆரம்பித்துள்ளது.

இந்த நடவடிக்கைக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் தலைவர் வித்யா அமரபால குறிப்பிடுகிறார்.

அதிக மின் பாவனையில்லாத நேரத்தில் தொழிற்சாலைகளில் அதிகளவு மின்சாரம் பாவிக்கப்படுவது குறித்தும் இந்த ஆய்வின் ஊடாகக் கண்டறியப்படவுள்ளது.

இரவு 8.30 முதல் 9.30 வரையிலான காலப் பகுதியில் மின்சாரம் அதிகளவில் பயன்படுத்துவதால் மின்சார உற்பத்தியை அதிகரிக்கவேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தைக் குரைப்பது தொடர்பாக ஆராய்வதே இந்த ஆய்வின் நோக்கமென மின்சார சபைத் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.