ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home

சோமாலியாவிலுள்ள இலங்கை மாலுமிகளை விடுவிக்க நடவடிக்கை

E-mail Print PDF

ஜூலை  28, 2010  இலங்கை மாலுமிகள் 13 பேருடன் கடத்தப்பட்டு சோமாலிய கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில்  உள்ள சவுதி அரேபியக் கப்பலை மீட்பதற்குக் குறித்த கப்பல் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கொன்சியூலர் பிரிவு தெரிவித்துள்ளது.

சோமாலிய கடற்கொள்ளையர்கள் கோரியுள்ள கப்பத் தொகையை வழங்குவதற்கு அந்தக் கப்பல் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜெத்தாவில் உள்ள இலங்கைக் கொன்சியுலர் நாயகம் சபருல்லா கான் தெரவித்துள்ளார்.

இது தொடர்பாக நாம் துறைமுகம் மற்றும் விமான சேவை அமைச்சின் வர்த்தக கப்பல் பணிப்பாளர் நாயகம் சாந்த வீரக்கோனிடம் வினவினோம்

சோமாலிய கடற்கொள்ளையர்களினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 பேரையும் மீட்பதற்குத் தற்போது இராஜ தந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.