ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home

பெண்கள் சிறையில் 45 கைத்தொலைபேசிகள்

E-mail Print PDF

ஜூலை 27, 2010  வெலிக்கடைச் சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது 45 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பெண் கைதிகளிடமிருந்து 21 ஆயிரம் ரூபா பணத்தையும் தாம் கைப்பற்றியதாகச் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ ஆர் சில்வா குறிப்பிட்டார்.

விசேட குழுவொன்றினால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசிகள்  பெண் கைதிகளுக்கு எவ்வாறு கிடைத்தன என்பது குறித்த விசாரணைகள்  நடைபெறுவதாகச் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் கூறினார்.