ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home

மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அரச நிறுவனங்கள் ஒத்துழைப்பில்லை?

E-mail Print PDF

ஜூலை 27, 2010 மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு அரச நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஒத்துழைப்புக் கிடைப்பதில்லையென ஆணைக்குழுவின் செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குற்றஞ்சாட்டுகிறார்.

பெரும்பாலான அரச நிறுவனங்களின் தலைவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து அறிந்திருக்காமையே இதற்குக் காரணமென அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த நிலைமையில் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பாரிய சிக்கல் நிலவுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  செயலாளர் குறிப்பிடுகிறார்.

மனித உரிமைகள் ஆணைக்குழு, பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தின்மூலம் உருவாக்கப்பட்ட அரச நிறுவனமென அவர் சுட்டிக்காட்டுகிறார்.

புதிய நிர்வாகக் கட்டமைப்புக் கொள்கைகளின் பிரகாரம் செயற்படுவதற்குரிய போதிய தெளிவு நிர்வாக அதிகாரிகளிடம் காணப்படவில்லை என்பது இதன்மூலம் தெரிய வருவதாக ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்தார்.

இதன் காரணமாக ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளின்போது உரிய கவனத்தை அதிகாரிகள் செலுத்துவதில்லையென்பதுடன் ஒத்துழைப்பும் வழங்குவதில்லையெனச் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குற்றஞ்சாட்டினார்.