ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home News item 2 எல் ரி ரி ஈ உறுப்பினர் மூவர் இந்தியாவில் கைது

எல் ரி ரி ஈ உறுப்பினர் மூவர் இந்தியாவில் கைது

E-mail Print PDF

ஜூன் 22, 2010  மேலும் மூன்று எல்.ரீ.ரி.ஈ செயற்பாட்டாளர்கள்  இந்தியாவில் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எல் ரி ரி ஈ செயற்பாட்டாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு 04 நாட்கள்  கடந்த நிலையில் இவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று வெளியாகியிருந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது 

தமிழ் நாடு பொலிஸ் துறையின் எஸ் கியூ பிரிவின் திருச்சிராப்பள்ளிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது இந்தக் குழுவினர் கைதானதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த நபர்களிடம் இருந்து 4 ஆயிரத்துத்து 900 சாதாரண டெட்டனேட்டர்களும் 437 இலத்திரனியல் டெட்டனேட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஜூன் மாதம் 16 ஆம் திகதி கைதான 36 வயதுடைய  சிரஞ்சீவி என்ற எல்ரீரிஈ புலனாய்வுப் பிரிவு உறுப்பினருடன் இணைந்து இவர்கள் கடந்த யுத்த காலத்தில் எல் ரி ரி ஈ இயக்கத்திற்காகக் களவாக வெடிபொருட்களைக் கொண்டு வரும் நடவடிக்கையுடன் தொடர்புபட்டவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர். 

இது தொடர்பில்  இலங்கை வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளர் ரஞ்சித் உயன்கொயவிடம் வினவியபோது இந்த விடயத்தின் உண்மைத் தன்மை பற்றி  தாம் ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

சென்னையில்  உள்ள இலங்கைக்கான பிரதி  உயர்ஸ்தானிகர் வீ. கிருஸ்ணமூர்த்தியிடமிருந்து இது குறித்த அறிக்கை ஒன்றைத்  தாம் எதிர்பார்ப்பதாகவும்  வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளர் தெரிவித்தார்.