ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home News item 2 முன்னாள் பெண் போராளிகளுக்குத் தொழில் வாய்ப்பு

முன்னாள் பெண் போராளிகளுக்குத் தொழில் வாய்ப்பு

E-mail Print PDF

ஜூன் 20, 2010  புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ  பெண் உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் வவுனியாவில் இருந்து இன்று தொழில்களுக்குச் சென்றனர்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 400 முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ பெண் உறுப்பினர்கள் தங்கள் எதிர்காலம் குறித்த கனவுகளுடன் தொழில்களுக்காக வெளியேறிச் சென்றனர்.

வவுனியா வேப்பங்குளம் புனர்வாழ்வு  முகாமைச் சேர்ந்த 300 பெண்களும், பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமைச் சேர்ந்த 100 பெண்களும் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.

இந்த முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ பெண் உறுப்பினர்கள்  நேற்றுக் காலை முதல் ஆடைத்  தொழிற்சாலைகளில் தொழில்களில்  ஈடுபடுத்தப்பட்டனர்.

பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் இருந்த 100 பெண்களும், அலவ்வ பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Last Updated ( Tuesday, 22 June 2010 12:12 )