ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home

க.பொ.த பரீட்சார்த்திகளுக்கு துரித அடையாள அட்டை

E-mail Print PDF

மார்ச் 10, 2010 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவருக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அனைத்துப் பாடசாலைகளதும் அதிபர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்தார்.

இதன்படி 16 வயதான சகல மாணவரும் தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை அனுப்பமுடியும்.

விண்ணப்பங்கள், குறித்த பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தப்படவேண்டும்.

திணைக்களத்துக்குக் கிடைக்கும் விண்ணப்பங்களை ஆராய்ந்தபின் இரண்டு வார காலத்துள் அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.