மார்ச் 10, 2010 நாட்டில் நிலவும் கடும் வரட்சி காரணமாக நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்து, நீர் மின்சார உற்பத்தியும் குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கிறது.
இதனால் அனல் மின்னுற்பத்தி நிலையங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்புக்குள் சேர்த்துக் கொள்வதற்கான அளவு 70 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் தலைவர் திஸ்ஸ ஹேரத் தெரிவித்தார்.
நீர் மட்டம் குறைவடைவதற்கு முன்னர் தேசிய மின் கட்டமைப்புக்குப் பெற்றுக் கொண்ட 35 சதவீத மின்சாரம் தற்போது 30 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வார நாட்களில் 30 மில்லியன் அலகு அளவிலான மின்சாரம் பாவனைக்குத் தேவைப்படுவதாகவும் வார இறுதி நாட்களில் இது 24 மில்லியன் அலகாகக் குறைவடைவதாகவும் மின்சாரசபைத் தலைவர் கூறினார்.













