ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home

பொலிசிலிருந்து தப்பமுயன்ற இருவர் பலி

E-mail Print PDF

மார்ச் 09, 2010 பொலிஸ் சிறைக் கூண்டிலிருந்து தப்ப முயன்ற இருவர் பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளனர்.

வெல்லவ பகுதியில் இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

காவல் கடமையில் இருந்த பொலிசாரைத் தாக்கித் துப்பாக்கியொன்றை அபகரித்துக் கொண்டு , இச் சந்தேக நபர்கள் சிறைக் கூண்டின் கூரையூடாக வெளியேறி முச்சக்கர வண்டியொன்றிலேறித் தப்பிச் சென்றதாக பொலிசார் கூறினர்.

சந்தேக நபர்களை விரட்டிச் சென்ற பொலிசார் காட்டுப் பகுதியொன்றில் வைத்து நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவரும் பலியானதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Last Updated ( Thursday, 11 March 2010 09:02 )