ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home

அவசரகாலச் சட்டம் மேலும் நீடிக்கப்பட்டது

E-mail Print PDF

மார்ச் 09, 2010 அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்தால் நீடிக்கும் பிரேரணை பாராளுமன்றத்தில் இன்று 69 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 93 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் வழங்கப்பட்டன.

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும்  அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததுடன், ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, உட்பட எதிர்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

வாக்கெடுப்புக்குப் பின்னர் சபை நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டன.

கடந்த மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் பொருட்டுப் பாராளுமன்றம் இன்று விசேடமாகக் கூட்டப்பட்டது.