மார்ச் 09, 2010 கொழும்பு பம்பலப்பிட்டிக் கடற்பரப்பில் நேற்று விபத்துக்குள்ளான கடற்படைப் படகை அப்பிரதேசத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
நேற்றுப் பிற்பகலில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தையடுத்து கடற்படைப் படகிலிருந்த 5 கடற்படை வீரர்களும் கடலில் குதித்து உயிர் தப்பியுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் அத்துல செனரத் குறிப்பிட்டார்.
படகின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து இடம்பெற்றதாக கடற்படைத் தரப்புக் கூறுகிறது.













