ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home News item 2 கல்பிட்டி அனல் மின் நிலையத்தில் தீ

கல்பிட்டி அனல் மின் நிலையத்தில் தீ

E-mail Print PDF

மார்ச் 09, 2010 கல்பிட்டி நுரைச்சோலை மின்நிலையம் அமைந்துள்ள பகுதியிலுள்ள களஞ்சிய சாலையில் இன்று அதிகாலை தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்ட தீயினால் பிளாஸ்டிக் குழாய்கள், இறப்பர் குழாய்கள் என்பன உருகி அழிந்ததாகப் பொலிசார் தெரிவித்தனர்.

கல்பிட்டிப் பொலிசாரும் பாலாவி விமானப்படைத் தீயணைக்கும் படைப் பிரிவினரும், கடற்படையினரும், மின் நிலைய ஊழியர்களின் ஒத்துழைப்புடன் தீயைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

இவ்விபத்தில் எவருக்கும் எவ்வித ஆபத்துகளும் ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

Last Updated ( Tuesday, 09 March 2010 06:45 )