மார்ச் 09, 2010 தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவேண்டுமென தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் பிரசாரங்கள்போது இடம்பெறும் முறைகேடுகளைத் தடுப்பதற்கு இந்தத் திருத்தம் தேவையென தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் தேசிய இணைப்பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.
விகிதாசார முறைமை மற்றும் மாவட்ட ரீதியிலான முறைமை ஆகியவற்றில் ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டுமென அவர் சுட்டிக் காட்டுகிறார்.
சுவரொட்டிகள், உருவப்படப் பதாதைகள் என்பவற்றைக் காட்சிக்கு வைக்கும்போது பாராளுமன்றத் தேர்தல் சட்டங்களின்படி செயற்படுவதில் சிக்கல் தோன்றியுள்ளதை அவர் எடுத்துக் காட்டினார்.
இதனால்தான் 1981 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேர்தல் சட்டத்தைமீறும் வகையில் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்லப்படுவதாகக் கூறிய அவர் எதிர்காலத்தில் இச்சட்டம் திருத்தப்படவேண்டுமெனக் கூறினார்.
இதேவேளை ஆசியாவில் மட்டுமல்லாது உலக நாடுகளில் ஜனநாயக ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேர்தல் சட்டத்திற்கமைய இலங்கையிலும் தேர்தல் சட்டங்கள் மாறுபடவில்லையென கஃபே எனப்படும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கன தேசிய அமைப்பின் ஊடக இணைப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
பல் ஆண்டுகளுக்குமுன் இயற்றப்பட்ட தேர்தல் சட்டம்தற்போது நடைமுரையில் இருப்பது பொருத்தமற்றது என அவ்ர் சொன்னார்.
தற்போதைய தேர்தல்மோசடிகள் மற்றும் சட்டவிரோதச் செயல்களைத் தடுப்பதற்கு தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லையெனக் கூறிய அவர் இவற்றைத் தடுப்பதற்கான சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டுமென்றார்.













