மார்ச் 09, 2010 கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் வைக்கப்பட்டுள்ள புனித அந்தோனியாரின் திருப்பண்டத்தைத் தரிசிக்கப் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் தொடர்ந்தும் வருகை தந்த வண்ணமுள்ளனர்.
புனித அந்தோனியாரின் திருப்பண்டம் கொச்சிக்கடைத் திருத்தலத்தில் இன்று இரவு வரை விசுவாசிகளின் தரிசனத்திற்காக வைக்கப்படவுள்ளது.
இன்று அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை திருப்பண்டத்தைப் பக்தர்கள் தரிக்கமுடியுமெனத் திருத்தல நிர்வாகஸ்தர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து புனித அந்தோனியாரின் திருப்பண்டம் நாளை முதல் நாட்டிலுள்ள முக்கிய கத்தோலிக்கத் தேவாலயங்களுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 175 ஆவது வருட ஜூபிலிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு இத்தாலியின் பாதுவா நகரிலிருந்து புனித அந்தோனியாரின் திருப்பண்டம் நேற்று முன் தினம் கொண்டுவரப்பட்டது.













